பாடல் : கர்த்தாவே நீர் என்னை
பாடல், ராகம் ,பாடியவர் : வி. தனலட்சுமி
E-mail : v.dhanalakshmilic@gmail.com
இசை : சகோதரர் . E. ஸ்டாலின், Zion Orchestra

Song : Karthave Neerenthan
Lyric, Tune, Sung By : Sis V. Dhanalakshmi
Music : Bro.E. Stalin, Zion Orchestra
Edited by : Digital Knight

கர்த்தாவே நீர் என்னை
காண்கின்ற தேவன்
எப்பொழுதும் என்னை நீர்
சூழ்ந்திருக்கும் தேவன்
காலுக்கு தீபமாய் பாதைக்கு
வெளிச்சமாய் உம்முடைய
வசனம் என்றும் என்னுடனே இருக்குமே
கர்த்தருக்கு பயந்து அவர்
வழிகளிலே நடக்கின்றவன்
எவனோ அவன் பாக்கியவான்

உமது வேதம் என் மன
மன மகிழ்ச்சியாய் இறாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்.

என் கண்கள் எப்பொழுதும்
கர்த்தரையே நோக்குமே
என் ஆத்துமா உம்மில்
களிகூறுமே

தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
ஆதியாகமம் 16 : 13
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர், என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
சங்கீதம் 139:3
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119 : 105

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 128 : 1
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
சங்கீதம் 119 : 92

எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது
சங்கீதம் 123 : 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *